பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த சாலை பணியாளர்கள், காவல் ஆய்வாளர் மீது பெட்ரோலை தெளித்து தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்க்ரூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த சாலை பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோலை தெளித்ததாகவும், காவல் ஆய்வாளர் ஜஸ்வீர் சிங் மீது தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. சக போலீசார் தீயை அணைத்து காயமடைந்த ஆய்வாளரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போராட்டக்காரர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.