பிரான்சில் மசூதிகளுக்கு அருகில் ரத்தம் சொட்ட சொட்ட பன்றித் தலைகள் வைக்கப்பட்ட விவகாரத்தில் 11 பேரை செர்பிய போலீசார் கைது செய்துள்ளனர். இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மசூதிகளுக்கு வெளியே பன்றித் தலைகள் வைக்கப்பட்டிருந்தன.அதில் அதிபர் இம்மானுவேலின் பெயரும் எழுதிப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வரும் நேரத்தில், மக்களிடையே பிளவை உண்டாக்கி வன்முறையை தூண்டும் நோக்கத்தில் மசூதிகளுக்கு வெளியே பன்றித்தலைகள் வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.