மேற்குவங்கத்தில் ஊடுருவல் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த கட்சியினரும் பொதுமக்களும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்தியக் குடிமக்கள் அல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.