வரும் 2 முதல் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புறப்படவுள்ளார். இப்பயணத்தின் போது அவர் கானா, அர்ஜெண்டினா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார். உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.