காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மத்தியில் வேண்டுமென்றே அச்ச உணர்வை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் 7ஆயிரத்து600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், இந்துக்களுக்கு இடையே சண்டையை உருவாக்க காங்கிரஸ் எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை என கடுமையாக சாடினார்.