இந்தியா, போர் விமானங்களுக்காக அடுத்த பத்தாண்டுகளில் 65 ஆயிரத்து 400 கோடி செலவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக தற்காப்பு அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அரசாங்கத்தின் தற்காப்பு ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் எஸ் வி ரமணமூர்த்தி இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 இயந்திரங்கள் பல்வேறு போர் விமானங்களுக்குத் தேவைப்படுவதாக கூறினார். இந்தியாவில் தற்காப்புச் சாதனங்களைத் தயாரிப்பதற்கான ஆற்றலைப் பெருக்க மத்திய அரசு முனைந்து வருவதாக கூறியவர் வெளிநாடுகளில் ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்திய அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.