பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஜீவிகா சிஎம் எனப்படும் சமூக பெண் பணியாளர்களுக்கு நிரந்தர வேலையுடன் மாதாந்திர ஊதியமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். இவர்கள் அரசு நிறுவனங்களில் சமூக சமையற் கூடங்களை நடத்தும் பெண் பணியாளர்கள் ஆவர்.அது போன்று மாநில அரசில் ஒப்பந்த பணியாளர்களாக இருக்கும் அனைவரும் அரசு பணியாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பதவியேற்ற 20 மாதங்களில் அது நடைமுறைக்கு வரும் எனவும் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.