மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற பேரில் பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் ஷேகர் சர்மா வெளியிட்ட பதிவு சர்ச்சையாகி கடும் எதிர்ப்பை சம்பாதித்ததை தொடர்ந்து தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையில் ஒவ்வோரு தலைமுறைக்கும் ஊக்கமாக விளங்கிய மிகவும் எளிமையான மனிதருடன் உரையாடும் வாய்ப்பு இனி அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு கிடைக்கபோவதில்லை என பதிவிட்டதோடு நில்லாமல் இந்த பதிவில் டாடா.. பாய் பாய்.. என விஜய் ஷேகர் சர்மா கூறியது தான் சர்ச்சையானது. பலரும் உன்னதமாக மனிதருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்ற ரீதியில் கொந்தளித்தனர்.