உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆம்னி வேன் மீது பயணிகள் பேருந்து மோதிய கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லக்க்ஷிம்பூர்-லக்னோ நெடுஞ்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. லக்க்ஷிம்பூரிலிருந்து லக்னோ சென்ற பயணிகள் பேருந்து, சிதாபுரிலிருந்து((Sitapur)) எதிரில் வந்த ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.