3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே நாட்டு அதிபர் ((Santiago Peña)) சான்டியாகோ பெனா, டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு வரவேற்கும் விதமாக மாளிகையில், சிறப்பான முறையில் விருந்து பரிமாறப்பட்டது.அதன் பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, 1961-ம் ஆண்டு இருநாடுகள் இடையே தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து, இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மதிப்புகள் அடிப்படையில் நட்புரீதியிலான உறவுகளை பகிர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.