ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி, இந்திய ராணுவ நிலையை நோக்கி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்திய ராணுவ வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.