ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் உசேன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபுர்கான், பாகிஸ்தான் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் உஸ்மான் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.