மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுக்குள் எலி சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாயில் உணவு பொருட்களை வைத்து கொண்டு, மேஜையின் மீது எலி ஓடியது வீடியோவில் பதிவாகியுள்ளது. மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் 6 குழந்தைகளுக்கு ஹச்.ஐ.வி. நோய் தோற்று பரவிய சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், இது போன்ற வீடியோ வெளியாகி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.