ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்து 355 கணக்குகளை முடக்க இந்திய அரசு தங்களுக்கு உத்தரவிட்டதாக, எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் IT விதிகளை மீறியதால் இந்த கணக்குகளை முடக்குமாறு கடந்த 3 ஆம் தேதி இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இப்படி எந்த கணக்கையும் முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.