தமிழ்நாடு கால் பந்தாட்ட சங்கத்தின் தேர்தலை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவுக்கு எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகவும், தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும், பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.