விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமித்து பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் இந்த பணிப்பெண்கள் அமர்த்தப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் 'ஷிவ்நேரி சுந்தரி' என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளின் மோசமான நிலை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளில் அரசு ஈடுபடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.