பீகாரில், அரசியலமைப்புக்கு எதிராகவும் பாஜகவுக்கு ஆதரவாகவும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறி இதனை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய பாஜக கூட்டணி அரசை கண்டிக்கும் சிறு போஸ்டர்களை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக இன்று நாடாளுமன்றம் கூடியதும், இதே பிரச்சனையை முன் வைத்து எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.