பீகார் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகளே கூட்டணியை மதிக்காமல் இஷ்டம் போல் வேட்பாளர்களை அறிவித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வைஷாலி தொகுதியில் சஞ்சீவ்குமார் என்பவருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்துள்ள நிலையில், அதே தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னத்துடன் வேட்பாளர் அஜய் குஷ்வாஹா போட்டியிடுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பல்வேறு தொகுதிகளில் எதிர்க்கட்சிகளே ஒற்றுமையுடன் செயல்படமால் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன.