ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமில்லை என்றும் அது, இந்தியாவின் அரசியல், சமூகம் மற்றும் ராணுவ மன உறுதியின் சின்னம் எனவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியையும், ராணுவ வலிமையையும் எடுத்துரைப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.