ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்வதாக இந்திய விமானப்படை எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அப்பதிவில், இந்தியாவின் நோக்கங்களுடன் இணைந்து விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறும் கேட்டுகொண்டது.