மும்பையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் தனது புதிய விற்பனை நிலையத்தை டெஸ்லா நிறுவனம் இன்று தொடங்குகிறது. இதற்காக ஏரோசிட்டியில் 8 ஆயிரத்து 200 சதுர அடி அளவிலான இடத்தை , மாதந்தோறும் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்துள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் விற்பனை நிலையத்தை மும்பையின் பாந்தரா பகுதியில் தொடங்கியது.