சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. எனவே தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பம்பை நதிக்கரை முதல் சன்னிதானம் வரை 13 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.