உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தா்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனா். இமயமலையில் 11 ஆயிரம் அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் கோயில், 12 ஜோதிா்லிங்கங்களில் 11-ஆவது தலமாகும். குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட இக்கோயிலின் நடை வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திறக்கப்பட்டது. நடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோயிலில் முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று முதலாவதாக வழிபட்டாா்.