பீகார் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. பா.ஜ.க. மூத்த தலைவரும் துணை முதலமைச்சருமான சாம்ராட் சவுத்ரி, முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். அவர் வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் கிருபால் யாதவ், தானாபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதையும் படியுங்கள் : பீகார் தேர்தலில் நேருக்கு நேர் மோதும் எதிர்க்கட்சி கூட்டணி