பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் பெறப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.