போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் அமைப்புகள் குறித்தான ஆய்வு நிறைவு பெற்றதாகவும், எந்த விமானத்திலும் பிரச்சனை இல்லை எனவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் விமான விபத்தை தொடர்ந்து போயிங் விமானங்களின் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டதன் பேரில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.