டெல்லி முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஆயுள் கால வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல் வழங்கபடாது என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, காற்று தர மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையுடன் இணைந்து மாநில அரசு இதனை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோலும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படாது என வாடிக்கையாளர்களுக்கு பிளக்ஸ் மற்றும் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.