ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நாட்டின் பணவீக்கம் 3ம் காலாண்டில் சராசரியாக 4.7% ஆகவும், 4வது காலாண்டில் 4.3% ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதேபோல இந்த நிதியாண்டில், ஜி.டி.பி., 6.7% ஆக அதிகரித்துள்ளதாகவும் 2025-26ம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3% ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.