ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட உலகளாவிய முக்கிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய அவர், உலகளாவிய அமைப்புகளின் காலாவதியான தன்மையை சுட்டிக்காட்டி விமர்சித்தார். 20 ஆம் நூற்றாண்டின் தட்டச்சுப்பொறியில் 21 ஆம் நூற்றாண்டின் மென்பொருளை இயக்குவது சாத்தியமற்றது என கூறினார்.