தேர்தல் டிக்கெட் வாங்குவதற்காக கட்சியினர் திரண்டதை அடுத்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் டிக்கெட் கேட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் நிதிஷ் குமாரின் இல்லத்தை முற்றுகை இட்டுள்ளனர். உச்சபட்சமாக, மீண்டும் டிக்கெட் கேட்டு தற்போது கோபால்பூர் தொகுதி ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவாக இருக்கும் கோபால் மண்டல் என்பவர் நிதிஷ்குமாரின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.நிதிஷ்குமாரின் வீட்டை சுற்றி வளைத்த நிர்வாகிகளை தடுக்க தடுப்புகளால் கட்டுப்படுத்த போலீசார் முயன்றாலும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.இதையும் படியுங்கள் : PF ல் இனி 100% பணம் எடுக்கலாம்!