டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசாரிக்க முழுமையான புலனாய்வு குழுவை என்ஐஏ எனப்படும் தேசிய விசாரணை முகமை அமைத்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து உள்ள மூத்த அதிகாரிகள் இந்த விசாரணையை கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் நேற்று என்ஐஏவிடம் ஒப்படைத்த து. அதன் பின்னர் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, இதர மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் டெல்லி போலீசாருடன் இணைந்து என்ஐஏ துரித கதியில் விசாரணையை துவக்கியுள்ளது.