காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய நிலையில், அதற்கு நேரு அனுமதிக்காமல் தடுத்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தின் ஏக்தா நகரில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் பிரிக்கப்பட்டு தனி அரசியலமைப்பு, தனி கொடி என காங்கிரஸ் செய்த பல்வேறு தவறுகளால் பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டதாக அவர் சாடினார். மேலும், ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்ற அவரது சிந்தனை மிக உயர்ந்தது என பிரதமர் பெருமிதம் கொண்டார்.