இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. ஸ்ரீ கண்டீவாரா ஸ்டேடியத்தில் கடந்த மே 24-ந் தேதி இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போர் பதற்றத்தால் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெறும் எனவும், 199 ரூபாய் முதல் பத்தாயிரம் வரையிலான விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவத்துள்ளனர்.