ஒரு காலத்தில் நக்சல் மையங்களாக இருந்த அனைத்தும் தற்போது கல்வி மையங்களாக மாறி வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், பல பழங்குடியின கிராமங்கள் இன்னும், டிஜிட்டல் உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் நக்சலைட் வழித்தடங்கள் என முன்னர் அறியப்பட்ட இடங்கள் அனைத்தும் தற்போது வளர்ச்சிக்கான வழித்தடங்களாக மாறி வருவதாக தெரிவித்தார்.