தசரா பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவில் பொதுமக்களின் வசதிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க அம்மாநில போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் மைசூருக்கு வரவுள்ளனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக கர்நாடகா மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரும் 9 முதல் 12ம் தேதி வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.