மும்பையில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் பலமணி நேரம் தாமதமானதால் சுமார் 300 பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானத்தில் அமர்ந்த பிறகு விமானம் புறப்படாமல் அப்படியே நின்றதால் சுமார் ஐந்து மணி நேரம் பயணிகள் அவதி அடைந்தனர். காலை 3.55 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களால் தாமதமானதாக இண்டிகோ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் இமிக்ரேஷன் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டாலும் தங்களுக்கு உணவோ, குடிநீரோ தரவில்லை என குற்றஞ்சாட்டி இண்டிகோ கவுன்டரை முற்றுகையிட்டனர்.