ஹிமாச்சலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக, தொகுதி மக்களிடையே எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 20 நாள்களுக்கு பின்னர், மண்டி தொகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஆய்வு செய்தார். அவர் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அப்பகுதி மக்களிடையே, தான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள், தானும் இங்கே ஒரு உணவகம் நடத்தி வருகிறேன், அங்கே, நேற்று வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் ஆனது என கூறி அனுதாபத்தை தேடினார்.