இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அந்த தொகுதியின் எம்பியும் இந்தி நடிகையுமான கங்கனா ரணாவத் பார்வையிட்டார். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூரும், கங்கனாவுடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.இமாச்சலில் சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மழை, வெள்ள பாதிப்பால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.