ஐந்து வயது சிறுமி தனது தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மகராஷ்டிராவில் நடந்துள்ளது. அகோலா பகுதியை சேர்ந்த பெண் தனது 5 வயது மகளையும் மகனையும் தனது இரண்டாவது கணவனின் அரவணைப்பில் வீட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. நடன வகுப்புக்கு சென்று வீடு திரும்பும் போது, தனது மகளின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன தாய், ரத்த காயங்களுடன் இருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கொடூரனை கைது செய்தனர்.