இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான முகம்மது அசாருதீனுக்கு தெலங்கானாவில் அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாதின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டாலும் அசாருதீனால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த நிலையில் அவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு மாநில ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், அசாருதீனுக்கு நாளை பதவிப்பிரமாணம் நடக்கும் என தெரிகிறது, 33 சதவிகித முஸ்லீம் வாக்காளர்கள் உள்ள ஜூப்ளி ஹில்சுக்கு வரும் 11 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. அதையும், பீகார் தேர்தலையும் மனதில் வைத்து அசாருதீன் அமைச்சராக்கப்படுவதாக கூறப்படுகிறது.