பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்தான வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் ஏற்பட்ட தாமத த்தை பொருட்படுத்த கூடாது என தாக்கலான மனு குறித்த தனது ஆட்சேபனையை தெரிவிக்குமாறு டெல்லி பல்கலைகழக நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி எந்த கல்லூரியில் என்ன படிப்பு படித்தார் போன்ற விவரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் RTI செயற்பாட்டாளர் நீரஜ் சர்மா உள்ளிட்டோர் மேல் முறையீடு செய்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 9-ன் படி பிரதமரின் கல்வித் தகுதியை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.