முதல் பிரதமரும் நவீன இந்தியாவின் சிற்பி என போற்றப்படுபவருமான பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 61 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்த தமது எக்ஸ் தள பதிவில் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தமது இதயபூர்வமான அஞ்சலிகளை செலுத்துவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். நேருவுக்கு நினைவஞ்சலி செலுத்தி உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேருவின் தொலைநோக்கு பார்வையுள்ள தலைமையை நினைவுகூருவதாக குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் இட்டவர் ஜவஹர்லால் நேரு என ராகுல் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். முன்னதாக காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி சாந்தி வனத்தில் உள்ள நேருவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.