பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்கப் போகிறார்கள் என்ற உளவுத் தகவல் மூன்று நாட்களுக்கு முன்னரே பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே தான் அவர் தமது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். உளவுத் துறையினர் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விட்டதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.