ஜெயின் சமூக ஆன்மீக தலைவர் ஆச்சார்ய வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தாம் அகிம்சையாளர்களின் கூட்டத்தில் பேசுவதாகவும், ஆனால் தாம் பேச வந்ததை பார்வையாளர்கள் புரிந்து கொண்டதாகவும் கூறி ஆபரேஷன் சிந்தூரை மறைமுகமாக சுட்டிக் காட்டினார். பிரதமரின் பேச்சால் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.இந்த விழாவில் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதை பெற்ற மோடி, இந்த பட்டத்தை பெற தமக்கு தகுதி இல்லை என கருதுவதாகவும் ஆனால் துறவிகள் அதை வழங்கியதால் ஒரு பிரசாதமாக பெற்றுக் கொள்வதாவும் கூறினார்.