கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா ஆனந்த், தமிழகத்தை சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.