டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதா நடைபயிற்சி சென்ற போது அவரிடம் மர்ம நபர் செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் சுதாவும், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மாவும் போலந்து தூதரகத்தின் 4 வது கேட் அருகே நடைப் பயிற்சி சென்ற போது, எதிர்திசையில் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் வந்த நபர் சுதாவின் கழுத்தில் இருந்து சுமார் 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றான். இதனால் கழுத்தில் காயம் ஏற்பட்டதுடன், தனது ஆடையும் கிழிந்தததாக தெரிவித்துள்ள சுதா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.