உலளாவிய அளவில் 19 நாடுகளுக்கு தொடர்புடைய 59 போர்கள் அல்லது மோதல்கள் நடந்து வருவதால் சர்வதேச அமைதியை நிலைநாட்டுவது பெரிய சவாலாக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.டெல்லியில், ஐநாவுக்கு படைகளை பங்களிக்கும் நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்ற கருத்தரங்கில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் சிக்கல்களும், குழப்பங்களும் நாடுகளுக்குள் நிலவுவதாக அவர் கூறினார். புவி அரசியலில் நாடுகளுக்குள் நிலவும் போட்டியால் ஐநாவில் எடுக்கப்படும் முடிவுகள் செயலற்று போவதாக தளபதி கவலை தெரிவித்தார். சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் பணியில் இந்தியா சுமார் மூன்று லட்சம் துருப்புகளையும் இதர பணியாளர்களையும் நியமித்துள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.