கர்நாடக மாநிலம் பெங்களூருவில், Etios Digital Services பணிபுரியும் சக பெண் ஊழியரின் ஆடையை விமர்சித்த நிகித் ஷெட்டி என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலுவலத்தில் பெண் ஊழியரின் ஆடையை பல முறை விமர்சித்த நிகித் ஷெட்டி, அவரது கணவரும், பத்திரிகையாளருமான ஷாபாஸ் அன்சாருக்கு குறுஞ்செய்தி மூலம், ”உன் மனைவியை ஒழுங்காக ஆடை அணிய சொல், இல்லையென்றால் அவரது முகத்தில் ஆசிட் வீசுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் நடவடிக்கை எடுக்குமாறு ஷாபாஸ் அன்சார் கேட்டுக் கொண்ட நிலையில், நிகித் ஷெட்டி 5 ஆண்டுகளுக்கு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.