போர் நிறுத்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கடந்த 7ஆம் தேதி இந்திய பதிலடி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பின்னரே இந்தியா, பாகிஸ்தான் அறிவித்ததை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்த மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தி உள்ளார்.