மும்பையின் குர்லா பகுதியில் உள்ள ஆட்டோ உதிரி பாகக் கடைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குர்லா மேற்கில் உள்ள குருத்வாரா அருகே கபாடியா நகரில் அதிகாலை கடைகளிலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடைகளிலிருந்த ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மின்சார வயரிங் பொருடகள் , டயர்கள் மற்றும் ஸ்கிராப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.